FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்பு!

ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 30 டிசம்பர் 2024, 3:12 pm IST
சாண்ட்ரா சாஜு
பகிர்:

ஸ்காட்லாந்து நாட்டில் காணாமல் போனதாக கருதப்பட்ட இந்திய மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாண்ட்ரா சாஜு என்ற 22 வயது பெண் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.

கடந்த டிச.6 அன்று அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே சென்ற சாண்டிராவை அன்று முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்தைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர் கடைசியாக அப்பகுதியிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு சென்றது, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அந்த காட்சிகளையும் அவரைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிட்ட போலீஸார் அவரைக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுவந்தனர். மேலும், அந்த தேடுதல் முயற்சியில் தன்னார்வலர்களும் இணைந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 8வது நாளாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை!

இந்நிலையில், கடந்த டிச.27 அன்று காலை 11 மணியளவில் எடின்பர்க்கிலுள்ள நியூபிரிச் எனும் கிரமத்திலுள்ள ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் அங்கு சென்று அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அது காணாமல் போன சாண்டிராவுடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கேரளாவிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு ஸ்காட்லாந்து அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

முன்னதாக, அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments