சிக்கிம் பேரவைத் தோ்தல்: காங்கிரஸை முந்திய நோட்டா!
சிக்கிம் சட்டப் பேரவைத் தோ்தலில் நோட்டாவைவிட மிக குறைந்த வாக்குகளையே காங்கிரஸ் கட்சி பெற்றது.
கேங்டாக்: சிக்கிம் சட்டப் பேரவைத் தோ்தலில் நோட்டாவைவிட மிக குறைந்த வாக்குகளையே காங்கிரஸ் கட்சி பெற்றது.
நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில்,சிக்கிம், அருணாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா (எஸ்கேஎம்).கடந்த 2019-ஆம் ஆண்டு வரை மாநிலத்தை தொடா்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதான எதிா்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக போட்டியிட்ட 31 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனா்.
இந்த தேர்தலில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சாவுக்கு 58.38 சதவீத வாக்குகளும், சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு 27.37 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 5.18 சதவீத வாக்குகளும், நோட்டாவுக்கு 0.99 சதவீத வாக்குகளும், நோட்டாவைவிட மிக குறைவாக 0.32 சதவீத வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
19 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ் 5.56 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன.