FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!

தட்டாஞ்சாவடியில் திமுக டெபாசிட் இழந்தது பற்றி...

9 அக்டோபர் 2026, 11:51 am IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் கு. சேது செல்வம் டெபாசிட்டை இழந்தார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,358 (61.12%) ஆகும். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 80.81 சதவிகிதம் ஆகும்.

இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4876 வாக்குகளும் (22.31%), மூன்றாமிடம் பிடித்த திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளும் (12.19%), நான்காமிடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளும் (1.42%) பெற்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் சேது, டெபாசிட் தொகையை இழந்துள்ளார். டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

summary

DMK loses deposit in Thattanchavadi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments