FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுயேச்சையாக அதிக வாக்குகள்.. திமுகவில் போட்டியிட்டு வைப்புத் தொகையை இழந்த வேட்பாளர்!

சுயேச்சையாக அதிக வாக்குகளைப் பெற்றவர் திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வைப்புத்தொகையை இழந்துள்ளார்.

9 அக்டோபர் 2026, 3:51 pm IST
சேது செல்வம்.
பகிர்:

புதுச்சேரியில் கடந்த பொதுத்தேர்தலில் சுயேச்சையாக அதிக வாக்குகளைப் பெற்றவர் திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வைப்புத்தொகையை இழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் என். ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜிநாமா செய்தார். இதனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அக். 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 பேர் வாக்களித்தனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த தேர்தலில் 80.81 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,358 (61.12%). இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4,876 வாக்குகளும் (22.31%), மூன்றாமிடம் பிடித்த திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளும் (12.19%), நான்காமிடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளும் (1.42%) பெற்றனர்.

புதுச்சேரியில் கடந்த 2026 பொதுத்தேர்தலில் இதே தட்டாஞ்சாவடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 3,984 ஓட்டுகளை சேது செல்வம் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக தனித்தனியே போட்டியிட்ட நிலையில் திமுக வேட்பாளராக சேது செல்வம் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் 3வது இடம் பிடித்த நிலையில், 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டையும் இழந்தார்.

summary

The person who had previously secured a large number of votes as an independent candidate contested the by-election representing the DMK and lost their security deposit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments