FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் ஏற்பேன்; ஒருமுறை என்னை பேரவைக்கு அனுப்பிப் பாருங்கள்! சீமான்

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி...

37 வினாடிகள் முன்பு
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சீமான் மரியாதை - X
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் நான் பொது வேட்பாளராக நிற்பது குறித்து நானோ திமுகவோ அதிமுகவோ எந்த முடிவும் எடுக்கவில்லை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் முத்துராமலிங்கத் தேவர் குறித்து புகழ்ந்து பேசிய அவர், "இந்த தேவர் நினைவிடம் ஒரு வழிபாட்டுத் தலம் போன்றது. இங்கு கட்சி கொடிகளுக்கு என்ன வேலை? இது என்ன உங்களுடைய கட்சிக் கூட்டமா, கட்சி மாநாடா? கட்சி கொடிகளுடன் தலைவர்கள் வருகிறார்கள்" என்றார்.

Advertisement

Advertisement

பின்னர் இடைத்தேர்தல் குறித்தும் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் பொது வேட்பாளர் என்பது குறித்து இன்னும் திமுக, அதிமுக முடிவெடுக்கவில்லை. ஏன் இன்னும் நானே முடிவெடுக்கவில்லை.

பொது வேட்பாளர் என்பதை கிளப்பிவிட்டதே தவெகவினர்தான். தவெக நிர்வாகிகள்தான் இதைப் பற்றி பேசி வருகின்றனர்.

நான் பொது வேட்பாளர்தான். எந்த சமுதாயத்திற்கும் ஆதரவானவன் அல்ல. அந்த வகையில் எங்கள் கட்சியினர் அனைவருமே பொது வேட்பாளர்கள்தான்.

இடைத்தேர்தலில் ஆதரவு குறித்து தேர்தல் அறிவிப்பு நேரத்தில் முடிவெடுக்க வேண்டும். அரசியல்ரீதியாக ஸ்டாலின், இபிஎஸ்ஸை விமர்சிக்கிறேன். அரசியல் கொள்கை நிலைப்பாடு வேறு. இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவித்தால் அதைக் கூட்டணியாக பார்க்க வேண்டாம். திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் ஏற்க மாட்டேன் என்று எப்படி கூறுவேன்? அவர்கள் பெருந்தன்மையுடன் ஆதரித்தால் ஏற்பேன்.

நான் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று என்னை சந்திக்கிறவர்கள் எல்லாரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். அதனால் மக்களுக்காகத்தான் போட்டியிடுகிறேன்.

ஒருமுறை சட்டப்பேரவைக்கு என்னை அனுப்பிப் பாருங்கள், சட்டப்பேரவையில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று காட்டுவேன். அம்பாசமுத்திரம் தொகுதியை தலைசிறந்த தொகுதியாக மாற்றுவேன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது, இலக்கு இருக்கிறது.

அம்பாசமுத்திரத்தில் தவெக - நாதக போட்டியிடட்டும். அண்ணனா, தம்பியா என்று தெரிந்துவிடும் அல்லவா?

ஸ்டாலின் பேசியது பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள், ஏன் இதுபற்றி முதல்வர் விஜய்யிடம் ஒரு கேள்வி கேளுங்கள் பார்ப்போம்" என்றார்.

முன்னதாக பசும்பொன்னில் செய்தியாளர்களுடன் பேசிய மு.க. ஸ்டாலின், இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு குறித்து தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவெடுப்போம்" என்று கூறினார்.

அம்பாசமுத்திரத்தில் போட்டி

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் 5 தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாகவும் இந்த இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நேற்று கூறியிருந்தார்.

summary

If DMK, AIADMK extend their support in byelection, I will accept it: Seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments