FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்

திமுகவை விட பெரிய தீயசக்தி தவெகதான் என சீமான் பேசியது குறித்து...

27 செப்டம்பர் 2026, 10:26 pm IST
சீமான் - படம் / நாம் தமிழர்
பகிர்:

திமுகவை விட பெரிய தீயசக்தி தவெகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப். 27) விமர்சித்தார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி கட்சி வேட்பாளர் கோ. ஜானகிராமனை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தவெகவை விமர்சித்து சீமான் பேசியதாவது:

Advertisement

Advertisement

''எங்கள் நிலத்தில் எல்லாம் இருந்து ஏன் வறுமை நிலை. வழிநடத்த சிறந்த தலைவன் இல்லை என்பதுதான் பிரச்னை.

ஒன்றுமே இல்லாத நாடு சிங்கப்பூர். அவனுக்கு கடலைத் தவிர வேறு எதுவும் கிடையாது. ஆனால் அங்கு வறுமை கிடையாது. கல்வியில் தலைசிறந்து விளங்குகிறது. காரணம் அங்கு இருந்த தலைவன்.

திமுக தீயசக்திதான். அதை விட தீயசக்தி தவெகதான். காசு கொடுக்காமல் வாக்குகளை பெற்ற கட்சி என்றால் அது, நாம் தமிழர் கட்சி மட்டுமே. அரசியல் கோட்பாடுகளை இன்னும் ஆழமாக உங்களிடத்தில் சேர்க்கத் தவறிவிட்டோமோ என்ற ஐயம் எனக்குள் உள்ளது.

திரைப் புகழ் வெளிச்சத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வந்தவர்கள் நாங்கள் அல்ல. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து, புதிய கட்சி தொடங்கியவர்களும் நாங்கள் அல்ல. உழைக்கும் அடித்தட்டு மக்களுடைய வாரிசுகள் நாங்கள்.

தேர்தல் வெற்றி - தோல்வி, லட்சிய வெறிகொண்ட எங்களை ஒன்றும் செய்யாது. ஒரு முறை எங்களிடம் அதிகாரம் வந்தால் உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றுவோம்.

மிக்ஸி, கிரைண்டர் இலவசமாகக் கொடுக்க மாட்டேன். நல்ல குடிநீர், படிப்பு, வேலை, அதற்கேற்ற ஊதியம், நல்ல வாழ்வைத் தருகிறேன். நல்ல சுற்றுச்சூழலைத் தருகிறேன். இலவசம் பெற வேண்டிய வறுமை நிலை இல்லாத வாழ்வை உங்களுக்குத் தருகிறேன். வேளாண்மையை முன்னிறுத்தி பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன்'' என என சீமான் பேசினார்.

summary

TVK is a greater evil force than the DMK Seeman's criticism

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments