ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் காலமானார்
மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச். ராமோஜி ராவ்(88) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளர் மற்றும் ஈநாடு குழும நிறுவனங்கள், ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச். ராமோஜி ராவ்(88) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காலமானார்.
Advertisement
Advertisement
தற்போது, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டு ஹைதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரம் முதல்வராக பொறுபேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1974 இல் முன்னணி தெலுங்கு மொழி நாளிதழான ஈநாடு தொடங்கினார். திரைத்துறை, கல்வி, நாளிதழ் என பல்துறை சாதனையாளரான ராமோஜி ராவுக்கு 2016 இல் இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.