FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை தாக்கல்! முதல்வர் அறிவிப்பு!

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை(ஜூலை 29) தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜூன் 2024, 7:38 pm IST
பகிர்:

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை(ஜூலை 29) தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக கோ.க.மணி எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

”இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாள்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

Advertisement

Advertisement

இதைத் தான் மீண்டும் உறுப்பினர் கோ.க.மணி இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை.

இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments