FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெள்ளப்பெருக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி

லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

29 ஜூன் 2024, 12:49 pm
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
பகிர்:

லடாக்: லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை மாலை தௌலத் பேக் ஓல்டி பகுதியில் ராணுவ டேங்க் விபத்துக்குள்ளானதில் ஒரு இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே தௌலத் பேக் ஓல்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை டி-72 ரக ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீர் மட்டம் திடீரென அதிகரித்ததன் காரணமாக ராணுவ டேங்கர் விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் இருந்த இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, மற்றவர்களைத் தேடும் பணி நடந்து வருவாதாக" பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வீரர்களின் உடல்களும் சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து மந்திர் மோர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்ததாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

ராஜ்நாத் சிங் இரங்கல்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் 5 பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.