இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லை: இங்கிலாந்து முன்னாள் வீரர்
இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் மே 27 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா போன்ற நாட்டுக்கு குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால், ஐபிஎல் தொடரை தவிர்த்து இந்திய வீரர்கள் உலகெங்கிலும் நடைபெறும் வேறு எந்த டி20 தொடரிலும் விளையாடுவதில்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். அதனால், இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் தேவையில்லை என நினைக்கிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.