கோப்புப்படம் ENS
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!

மாலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணத்தால், இன்று(நவ. 7) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய்யான குற்றச்சாட்டுகள்: ராகுல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக 2 சூப்பர் ஓவர்கள்..! தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!

கேரளத்தில் 29 கோயில்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா நேரலை!

ஒரே மாவட்டத்தில் திடீரென அதிகரித்த எச்ஐவி பாதிப்பு! பின்னணியில் சமூக ஊடகங்களா?

மருத்துவ படிப்பை நிறைவு செய்த ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT