தற்போதைய செய்திகள்

கங்குவா தணிக்கைச் சான்றிதழ்!

கங்குவா தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக...

DIN

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது.

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

கங்குவா படம் நவ. 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்துக்கு, தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT