கோட் படம்: முதல் நாளில் ரூ. 126 கோடி வசூல் செய்து சாதனை
உலகளவில் விஜய்யின் கோட் படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
உலகளவில் விஜய்யின் கோட் படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
லியோ படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கோட். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் நேற்று 5000 திரையரங்குகளில் வெளியானது. படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அதில், உலகளவில் விஜய்யின் கோட் படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.