முகப்பு
தற்போதைய செய்திகள்

நாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

நடிகர் குமரன் தங்கராஜன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

Updated On : 9 செப்டம்பர் 2024, 4:36 pm IST
குமரன் தங்கராஜன் நடிக்கும் படத்தின் பூஜை. - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

பாண்டியஸ் ஸ்டோர்ஸ் நடிகர் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. 4 சகோதர்கள் திருமணத்துக்கு பிறகும் கூட்டுக்குடும்பமாக வாழும்போது சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இத்தொடரின் இரண்டாம் பாகம் தந்தை - மகன்களை பிரதானப்படுத்தி தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்தில் கதிர் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் குமரன் தங்கராஜன். இவர் இத்தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

குமரன் தங்கராஜன். - படம்: இன்ஸ்டாகிராம்

அமேசான் பிரைமில் வெளியான வதந்தி தொடரில் பிரதான பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். வெள்ளித்திரையில் சிறிய பாத்திரங்களில் நடித்து வந்த குமரன், தற்போது கதாநாயகனாக நடிக்கவுள்ளதை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

லக்கி மேன் படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படத்தில் நடிகர் குமரன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பால சரவணன் லிவிங்ஸ்டன், வினோத் சாகர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய படத்தின் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.