FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அமைச்சர் முத்துசாமி

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி எனவும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிப்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்

Updated On : 26 செப்டம்பர் 2024, 12:50 pm IST
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி
பகிர்:

கோவை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி எனவும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிப்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் நாள் விழா” கண்காட்சியினை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. செந்தில்பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சரியான ஒரு நல்ல முடிவை இன்று வழங்கியுள்ளது. இதனை மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்னைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

அமைச்சர் பொறுப்பு

முதல்வர் வேறொரு நிகழ்ச்சிக்காக தில்லி செல்கிறார். எங்களைப் பொறுத்தவரை செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை வெற்றியான மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம். அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து கட்சித் தலைமையும் முதல்வரும் முடிவெடுப்பார்கள்.

மேலும் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக முத்துசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments