முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டு கடலில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளதைப் பற்றி...

Updated On : 3 ஏப்ரல் 2025, 5:25 pm IST
கிரீஸ் நாட்டு லெஸ்போஸ் தீவின் அருகே அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். - ஏபி
பகிர்:

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக துருக்கியிலிருந்து இன்று (ஏப்.3) அதிகாலை பயணித்த அகதிகள் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அந்த படகில் பயணித்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் மாயாமான அகதிகளைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னர், விபத்து நடந்த ஏகன் கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் 3 கடலோரக் காவல் படையின் கப்பல்கள், விமானப் படையின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்தில் தற்போது 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகதிகள் பயணம் செய்த கடல் பகுதியின் வானிலையில் பெரியளவில் எந்தவொரு மாற்றமும் இல்லாததினால், இந்த விபத்துக்கான அடிப்படை காரணம் தெரியவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், மோதல்கள் மற்றும் வறுமையினால் பாதிப்படைந்த ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பாவினுள் நுழைய படகு மூலமாக கிரீஸ் நாட்டு தீவுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments