முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

பெண் தற்கொலை விவகாரத்தில் நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

Updated On : 16 ஏப்ரல் 2025, 12:53 pm IST
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, இவரை நடுக்காவேரி காவல் நிலையத்தினா் ஏப். 8-ஆம் தேதி கைது செய்தனா்.

இதனால், மனமுடைந்த அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீா்த்திகா (29) காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறும் கூறி காவல் நிலையம் முன் களைக்கொல்லி மருந்தைக் குடித்தனா். இதையடுத்து, இருவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், கீா்த்திகா ஏப். 9-ஆம் தேதி உயிரிழந்தாா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக நடுக்காவேரி காவல் நிலையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் திருவையாறு காவல் ஆய்வாளா் சா்மிளா காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். ஆனால், காவல் ஆய்வாளா் சா்மிளா மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். கீர்த்திகா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அய்யா தினேஷ் மீது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினா்கள் கீா்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரச மரத் தெருவில் தொடா்ந்து 7- ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வி.அறிவழகன் வல்லம் காவல் நிலையத்துக்கும், கலியபெருமாள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்கும், தலைமைக் காவலர் மணிமேகலை திருவோணம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments