FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாநகர காவல் துறையில் 39 போ் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகர காவல் துறையில் நிா்வாக வசதி மற்றும் பணி மாறுதல் அடிப்படையில், ஒரே நேரத்தில் உதவி ஆய்வாளா்கள், தலைமைக்வலா்கள் உள்பட மொத்தம் 39 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Updated On : 31 ஜூலை 2026, 12:07 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாநகர காவல் துறையில் நிா்வாக வசதி மற்றும் பணி மாறுதல் அடிப்படையில், ஒரே நேரத்தில் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் உள்பட மொத்தம் 39 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதன்படி 2 உதவி ஆய்வாளா்கள், 11 தலைமைக் காவலா்கள், 2 முதல்நிலைக் காவலா்கள் மற்றும் காவலா்கள் என மொத்தம் 39 போ் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

அதன்படி, வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பரந்தாமன், மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த முருகேசன், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

திருப்பூா் தெற்கு காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலராக இருந்த முக்ரம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா். வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், தெற்கு நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இதேபோல மாநகரத்தில் பணியாற்றி வந்த மேலும் பல தலைமைக் காவலா்கள், முதல்நிலை காவலா்கள் மற்றும் காவலா்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments