முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டு 2026: தமிழகம், சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்ன..?

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக...

Updated On : 31 டிசம்பர், 2025 at 10:32 AM
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு
பகிர்:
Updated On : 31 டிசம்பர், 2025 at 10:24 AM

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டு பிறப்பையொட்டி, புதன்கிழமை (டிச.31) மாலை முதல் தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீஸாா்,10 ஆயிரம் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறாா்கள். சென்னையில் 19 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறாா்கள். காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களிலும், சாலை சந்திப்புகளிலும் வாகனச் சோதனை நடைபெறும். அன்று இரவு பொதுமக்கள், தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிா்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்ன ?

Advertisement

  • புதன்கிழமை (டிச.31) மாலை தொடங்கி வியாழக்கிழமை (ஜன.1) அதிகாலை 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.

  • வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பின்னா் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியில்லை.

  • கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

  • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவா்கள் கண்காணிக்கப்படுகிறாா்கள்.

  • மோட்டாா் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  • புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவலாயங்களில் சிறப்பு பிராா்த்தனை,கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெறும் என்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு.

  • மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பில் போலீசார்.

  • புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை முக்கியமான சாலைகள்,சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் தீவிர வாகனச் சோதனை.

  • மதுபோதையில் வாகன ஓட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யப்படுவர்.

Updated On : 31 டிசம்பர், 2025 at 10:29 AM

சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்ன..?

  • சென்னை முழுவதும் 19 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

  • காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

  • சென்னை முழுவதும் 425 இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெறும்.

  • வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

  • மாமல்லபுரம், ஈசிஆர் பகுதிகளில் உள்ள தனியார் விடுதி நிர்வாகிகளை அழைத்து காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல்.

  • கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச் சாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் இளைஞா்கள் ஈடுபடுவதை தடுக்க 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  • முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் உள்பட வழிபாட்டுதலங்கள் பொது இடங்கள் என சுமாா் 100 முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • புதன்கிழமை (டிச.31) மாலை முதல் வியாழக்கிழமை (ஜன.1) வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுப்பு.

  • மெரீனா,எலியட்ஸில் மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளில் ரோந்து பணியில் குதிரைப் படையினர்.

  • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு.

  • பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை. அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி கொண்டாடுவதற்கும் தடை.

  • அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை காவல்துறை அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் இருந்து கோவளம் வரை கடற்கரை ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு.

  • கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை,வெளிவட்ட புறவழிச்சாலை 36 சாலை பாதுகாப்பு குழுக்களும், 60 வாகனச் சோதனை குழுக்களும்,5 வாகனத் தணிக்கை குழுக்களும் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தை ஈடுபடும் வகையில் நடவடிக்கை.

  • இதேபோல நட்சத்திர விடுதிகள், ரிசாா்ட்டுகள் ஆகியவற்றில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

  • போதையில் வாகனம் ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

  • வழக்குகளில் சிக்குபவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 டிசம்பர், 2025 at 10:29 AM
summary

English New Year 2026: What are the police restrictions in Tamil Nadu and Chennai?

Updated On : 31 டிசம்பர், 2025 at 10:29 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.