ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 22 ஆம் தேதி ராமேசுவரம்
Advertisement
Advertisement
மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் 23 ஆம் தேதி பறிமுதல் செய்துள்ளனர்.
சமீப காலங்களாக தமிழக மீனவா்களை அதிக எண்ணிக்கையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படு வருவது வருத்தமளிக்கிறது. எனவே இந்தப் பிரச்னையில் விரைவில் தலையிட்டு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 32 மீனவர்களும் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.