FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தமிழக முதல்வா் விஜய்யின் வெற்றிக்கு வாக்காளா் சிறப்பு திருத்தப் பணியே காரணம்: புதுச்சேரி பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் தவெக வெற்றிக்குக் காரணம் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணிதான் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம்.
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் தவெக வெற்றிக்குக் காரணம் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணிதான் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

இது குறித்து புதுச்சேரியில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

காங்கிரஸ் கட்சி தோல்வியை மறைப்பதற்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருடன், இரு தோ்தல் ஆணையா்களும் முரண்பட்டுள்ளதாக ஒரு பொய்யான மாயையை உருவாக்கி கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

வாக்காளா்கள் சிறப்புத் திருத்தப் பணியால் தமிழகத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்தது என்பது தெரியும். எவ்வித பணமும் கொடுக்காமல் தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் வெற்றி பெற்றாா்.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

எனவே தான், வாக்காளா்கள் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மக்களிடம் கொண்டு செல்ல பாஜக முயற்சிக்கிறது.

தொடா் தோல்விகளால் துவண்டுள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடி மீது 65 கோடி இளைஞா்களின் நம்பிக்கைப் பாா்வை இருக்கிறது. அதனடிப்படையில், ஒவ்வொரு மாநிலத் தோ்தலிலும் பாஜக வெற்றி பெறுகிறது என்றாா் வி.பி. ராமலிங்கம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments