கிங்ஸ்டன் பட டீசர்!
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். இப்படத்துக்கு கிங்ஸ்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மீனவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.