FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

டங்ஸ்டன் திட்டம் ரத்து? நாளை(ஜன. 23) அதிகாரபூர்வ தகவல் வரும்! - அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) அதிகாரபூர்வ மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஜனவரி 2025, 4:51 pm IST
அண்ணாமலை (கோப்புப்படம்) - எக்ஸ்
பகிர்:

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று(புதன்கிழமை) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மத்திய இணையமைச்சர் எல். முருகன், சுதாகர் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை,

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும். மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் நிறைவேற்றப்படாது என போராட்டக்குழுவினருக்கு அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். தன்னை நம்பிய மக்களை பிரதமர் கைவிடவில்லை.

தமிழ்நாட்டில் அரிட்டாபட்டி பகுதியில் மட்டுமே டங்ஸ்டன் உள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எங்குமே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். போராட்டக்குழுவினருக்கு பாஜக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருகிறோம். நாளை இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments