FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு! தம்பதியிடையே இருக்க வேண்டிய வயது வித்தியாசம்!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தம்பதியின் சரியான வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது பற்றி...

50 வினாடிகள் முன்பு
கடற்கரைத் திருமணம் - படம்: TNIE
பகிர்:

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தம்பதியிடையே இருக்க வேண்டிய வயது வித்தியாசம் எவ்வளவு? என்பது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் திருமணம் மிகவும் இன்றியமையாதது. பொதுவாக இந்தியாவில் மணமகனுக்கு அதிக வயதும், மணமகளுக்கு அதை விட ஒரு சில ஆண்டுகள் குறைவான வயதும் இருக்கும்படிதான் திருமண பொருத்தம் பார்ப்பார்கள்.

காதல் திருமணங்களிலும் கிட்டத்தட்ட இந்த வயது வரம்பை பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள். ஒன்றாக படித்தவர்கள் என்றாலும், ஒரே வயதில் இருந்தாலும் சில நேரங்களில் ஒத்துப்போகிறது. வெளிநாடுகளில், வயது வித்தியாசங்கள் பெரிதாகப் பார்க்கப்படுவதில்லை.

Advertisement

Advertisement

ஆனால், தம்பதியிடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தம்பதிக்கு இடையே 5 முதல் 7 வயது வித்தியாசம் இருப்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது என்கிறது.

இதைவிட கூடுதலாக வயது வித்தியாசம் இருக்கும்போது, இந்தக் காலக்கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகம் தோன்றுவதாகவும், இருவருக்கும் ஒரே விருப்பம், முன்னுரிமை போன்றவை இருந்தால், வயது வித்தியாசம் பெரிய அளவில் கவனிக்க வேண்டியதில்லை, அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களுக்கு திருமணம் செய்ய உகந்தது அல்ல, அவர்களால் திருமண பொறுப்புகளை சமாளிக்க முடியாமல் போகலாம், அதேவேளையில், 21 வயது பெண்கள் திருமணத்துக்குரிய பக்குவத்தைப் பெற்றுவிடுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒன்று அல்லது 2 வயது வித்தியாசம் இருக்கும்போது, அந்த தம்பதிக்கிடையே அதிக கருத்துவேறுபாடுகள் ஏற்படுவதாகவும், வயது அதிகமாக இருக்கும் கணவர், மனைவியின் சிறு தவறுகளை ஏற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதில் அனைத்திலும் விதிவிலக்குகள் உள்ளன. இது வெறும் குறிப்பிட்ட தரப்பினரிடையே எடுக்கப்பட்டா மாதிரிகளைக் கொண்ட ஆராய்ச்சி முடிவுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments