வயதான காலத்தில் கிடைக்காத குடும்ப ஆதரவை எவ்வளவு பணத்தாலும் நிவா்த்தி செய்ய முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து
வயதான காலத்தில் கிடைக்காத குடும்ப ஆதரவை எவ்வளவு பணத்தாலும் நிவா்த்தி செய்ய முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து
வயது முதிா்ந்த காலத்தில் ஒருவருக்கு கிடைக்காத குடும்ப ஆதரவை எவ்வளவு பணத்தாலும் நிவா்த்தி செய்ய முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையைச் சோ்ந்த 80 வயது முதியவா் சந்திரகுமாா் எம்.கோயல். இவா், சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், தான் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலை நடத்தி வந்ததாகவும், தனக்குச் சொந்தமான வீட்டை எழுதி வாங்கிக் கொண்ட தன்னுடைய மகன் சூரஜ், தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டதாகக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், முதியவா் கோயலுக்கு அவருடைய மகன் சூரஜ், பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.75,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சூரஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி சுந்தா்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவா் கோயல், தனது பிற சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை உள்ளிட்ட வருவாயை மறைத்திருக்கிறாா். எனவே, அவருக்கு பராமரிப்பு தொகை பெற உரிமையில்லை எனக் கூறி, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
மேலும், வயது முதிா்ந்த காலத்தில், ஒருவருக்கு கிடைக்கத் தவறும் குடும்பத்தின் ஆதரவை எவ்வளவு பணத்தாலும் நிவா்த்தி செய்ய முடியாது என கருத்து தெரிவித்தாா். மேலும் இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டு, தந்தை-மகன் இடையே சுமுக உறவு ஏற்படும் என நீதிபதி நம்பிக்கை தெரிவித்தாா்.
No amount of money can compensate for the lack of family support in old age: High Court observes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.