ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 43,000 கன அடியில் இருந்து 50,000 அடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கன அடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இதனால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரும் நீா்வரத்தின் அளவை பொருத்து, காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவைப் பொருத்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 23,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 32,000 கனஅடியாகவும், மாலை 43,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை காலை 43,000 கனஅடியில் இருந்து 50,000 கன அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி மூழ்கி, பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள 10-ஆவது நாளாகவும், அருவிகளில் குளிப்பதற்கு 11-ஆவது நாளாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு சுமாா் 70,000 கனஅடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காவிரி கரையோரப் பகுதிகளில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
The flow of water in the Cauvery River at Hogenakkal has increased from 43,000 cubic feet per second to 50,000 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.