FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

அசாம் ஆளுநர் அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடியதைப் பற்றி...

Updated On : 14 மார்ச் 2025, 9:06 pm IST
அசாம் அரசின் மகளிர் காப்பகத்தில் அம்மாநில ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
பகிர்:

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் அம்மாநில ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, இன்று (மார்ச் 14) ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், அங்கு வசிக்கும் பெண்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், சொந்தம் என்ற உணர்வை ஊக்குவிக்கவும் ஆளுநர் அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் அந்த காப்பகத்தில் வசிக்கும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பரிசுக்களையும் வழங்கினார்.

மேலும், அங்கு வசிக்கும் பெண்கள் வாழ்க்கையின் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துமாறும், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு நம்பிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நீர் செடிகளிலிருந்து பல்வேறு பொருள்களை தயாரிப்பதில் அவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments