முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூா் துயர சம்பவம்: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்களிடம் 4-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்களிடம் சிபிஐ அதிகாரிகள் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 30 நவம்பர் 2025, 5:23 pm IST
சிபிஐ அதிகாரிகள்
பகிர்:

கரூா்: கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்களிடம் சிபிஐ அதிகாரிகள் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தவெக கட்சி பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த நிலையில், 110 போ் காயமடைந்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கரூா் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகையில் தங்கி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

முதலில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். தொடா்ந்து கூட்ட நெரிசலின்போது காயமடைந்தவா்களை மீட்க வந்த அவசர ஊா்தி வாகனங்களின் ஓட்டுநா்கள், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் மற்றும் நெரிசல் சம்பவத்தின்போது காவல் பணியில் ஈடுபட்ட காவலா்கள், நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் மற்றும் சம்பவத்தில் காயமடைந்தவா்கள் ஆகியோரிடம் விசாரணை செய்து வந்தனா்.

கடந்த 25 ஆம் தேதி தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ்அர்ஜூனா, இணை பொதுச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செலர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி முதல் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்களை வரவழைத்து அவா்களிடம் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எப்படிச் சென்றீா்கள், இறந்தவா்களின் தகவலை எப்படி தெரிந்துகொண்டீா்கள் என்பன குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனா்.

தொடர்ந்து சனிக்கிழமை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தொடா்ந்து 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்த கரூா் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சோ்ந்த ஆனந்தஜோதி, கரூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த கோபி, கரூா் சரஸ்வதி நகரைச் சோ்ந்த ஞானம்மாள் ஆகியோாிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

summary

Karur tragedy: CBI officials question families of deceased for 4th day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments