FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு... நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு நடத்தியது குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 12:18 pm IST
மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு - டிஎன்எஸ்
பகிர்:

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி அணையில் வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தனர்.

அணையின் வலது கரையில் நீர் அளவீட்டு கருவிகள், மேல்மட்ட மதகு ஆகியவற்றை பார்வையிட்டனர். மேட்டூர் அணையில் அதிகாரிகளுடன் நடந்த சென்று பார்வையிட்டார்.

நில அதிர்வு கருவிகள் உள்பட அணையில் வைக்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேட்டூர் அணையின் இடது கரையில் 16 கண் பாலத்தில் பாலத்தின் வளைவுகள் வலுப்படுத்தும் பணியையும் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

வலுப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தக்கூடிய பொருள்கள் தரமானதாக உள்ளதா என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் மது சூதனன் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேட்டூர் அணைக்கு கடந்த 5 ஆவது நாளாக வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 74.48 அடியாகவும் நீர் இருப்பு 36.67 டிஎம்சியாக உள்ளது.

summary

Chief Engineer of Water Resources Department inspects Mettur Dam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments