நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி(84) வயதுமூப்பு காரணமாக காலமானது குறித்து...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி(84) வயதுமூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி(84). இவர் சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த 2023 இல் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை சுப்பிரமணியம் காலமானார். தந்தை இறந்த இரண்டு ஆண்டிற்குள் தாய் மோகினி உயிரிழந்த செய்தி அஜித் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
தாயாரின் மறைவுச் செய்தியறிந்து, துபையில் இருந்த அஜித் சென்னை விரைந்துள்ளார்.
மோகினியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.