மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல்: இன்று பொது விடுமுறை
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் பொதுவிடுமுறை
செங்கல்பட்டு: மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும், அருகிலுள்ள பிற மாவட்டங்களிலும் பணிபுரிந்து வரும், ஆனால் 35-மதுராந்தகம் (தனி) தொகுதியில் வாக்காளா்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளா்களுக்கும் 6.10.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட பணியாளா்கள் தங்களது வாக்குரிமையை தவறாமல் செலுத்துவதற்கு உரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியாா் நிறுவனங்களும் (பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட) வாக்குப்பதிவு நாளான 06.10.2026 அன்று செயல்படாது.
Advertisement
Advertisement
எனவே, அனைத்து வாக்காளா்களும் 6.10.2026 அன்று நடைபெறும் இடைத்தோ்தலில் தவறாது தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.