ஆப்பிள் வாட்ச்சில் சேர்க்கப்படும் புதிய வசதி! மருத்துவ கருவிகளுக்கு மாற்றா?
ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 10-ல் இரத்த அழுத்தம் அளவிடும் புதிய வசதி!
புதிதாக வரவிருக்கும் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 10-ல் பலரும் எதிர்பார்த்த முக்கிய வசதி சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப உலகில் தனித்துவ தயாரிப்புகளின் மூலம் எப்போதும் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆப்பிள். ஆப்பிளின் வாட்ச்சுகள் பயனர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட குறிப்பில், ஆப்பிள் சிரீஸ் 10 வாட்ச்சில் இரத்த அழுத்தத்தை அளவிடும் வசதி இணைக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
உயர் இரத்த அழுத்தம், பல்வேறு நேரங்களில் மோசமான உடல்நிலைக்கு காரணமாக அமையும். இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க மருத்துவமனைகளில் அதற்கான கருவி பயன்படுத்தப்படும். ஆப்பிள் இதனை எப்படி சாத்தியமாக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
ஏற்கனவே ஆப்பிளில் பயன்பாட்டில் இருக்கும் நாடித் துடிப்பு அளவிடும் சென்சாரை மாற்றியமைத்து இரத்தத்தின் வேகத்தை அளப்பதன் மூலம் அழுத்தத்தை அளவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தாண்டு இறுதியில் புதிய ஐபோன் அறிமுகத்தோடு இந்த அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.