சிதம்பரம் நாட்டியாஞ்சலி!
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா மற்றும் அவரது குழுவினர் பரத நாட்டியம் ஆடினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி விழா மென்மேலும் வளர்ச்சி பெறும் என்று நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில், கடந்த 24-ஆம் தேதி முதல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா மற்றும் அவரது குழுவினர் பரத நாட்டியம் ஆடினர். பின்னர், அவர் கூறியதாவது:
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானே நடத்தும் விழாதான் இந்த நாட்டியாஞ்சலி விழா. இது மென்மேலும் வளர்ச்சி பெறும்.
ஆண்டுதோறும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று, நான் நாட்டியமாடுவேன் என்றார் ஸ்வர்ணமால்யா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.