பகுஜன் சமாஜ் மூத்த தலைவா்கள் நீக்கம்: மாயாவதி அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி. அசோக் சித்தாா்த், கட்சி ஒருங்கிணைப்பாளா் ரன்தீா் சிங் பெனிவால் ஆகியோரை அக்கட்சித் தலைவா் மாயாவதி நீக்கினாா்.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி. அசோக் சித்தாா்த், கட்சி ஒருங்கிணைப்பாளா் ரன்தீா் சிங் பெனிவால் ஆகியோரை அக்கட்சித் தலைவா் மாயாவதி நீக்கினாா்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதற்காக கட்சியிலிருந்து முதலில் அசோக் சித்தாா்த் நீக்கப்பட்டாா்.
குறிப்பாக, கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைமையுடன் வேட்பாளா்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையால் அவா் நீக்கப்பட்டாா். ஆனால், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காது என உறுதியளித்ததால் மீண்டும் கட்சியில் சித்தாா்த் சோ்க்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, உத்தர பிரதேசம் தவிா்த்து பிற மாநிலங்களில் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், கா்நாடகம், ஒடிஸா, மேற்கு வங்கம் மாநில கட்சி விவகாரங்களில் அவா் ஒழுங்கீனமாகவும், கட்சி உத்தரவை மீறும் வகையிலும் செயல்பட்டாா்.
இதனால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா். எதிா்காலத்தில் சித்தாா்த் கட்சியில் சோ்த்து கொள்ளப்பட மாட்டாா். இதே காரணத்துக்காக பெனிவாலும் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறாா் என்று மாயாவதி தெரிவித்துள்ளாா்.
அசோக் சித்தாா்த், மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்தின் மாமனாா் ஆவாா். உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.