குளிருக்கு இதமாக ஒரு சமையல் குறிப்பு! சோள ரொட்டி செய்வது எப்படி?
சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும்
தேவையானவை :
மக்காச் சோள மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
மல்லித்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு
செய்முறை :
Advertisement
Advertisement
சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும்
நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பாலித்தீன் கவரில் வைத்து லேசாகத் தண்ணீர் தொட்டு சப்பாத்தியைவிட சற்று தடிமனான ரொட்டிகளாகத் தட்டவும்.
தோசைக்கல்லில் மிதமான தீயில் எண்ணெய் பூசி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேக வைக்கவும்.
சூடான சுவையான சோள ரொட்டி தயார்! சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.