முகப்பு
செய்திகள்

சருமம் பொலிவாக வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்!

தோல் பராமரிப்பு அல்லது சருமப் பராமரிப்புக்கு அதிநவீன புதிய தயாரிப்புகளைத்தான் பலரும் தேடி வருகின்றனர்.

Updated On : 9 மார்ச் 2023, 5:57 pm IST
பகிர்:

தோல் பராமரிப்பு அல்லது சருமப் பராமரிப்புக்கு அதிநவீன புதிய தயாரிப்புகளைத்தான் பலரும் தேடி வருகின்றனர். ஆனால், உண்மையில் உங்கள் அழகுக்கான பொருள்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்கின்றன. சமையலறையில் உள்ள பொருள்களைக் கொண்டே அழகாக சருமத்தைப் பராமரிக்கலாம். 

அந்தவகையில் பப்பாளி பழம் சருமப் பராமரிப்பில் பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நிறமி முதல் முகப்பரு வரை தோல் பராமரிப்பு பிரச்னைகளை திறம்பட சமாளிக்க உதவுகிறது பப்பாளி. 

சருமப் பராமரிப்பில் பப்பாளி

Advertisement

Advertisement

இறந்த செல்கள்

பப்பாளி ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜென்டாக செயல்படுகிறது, இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. தோல் நிறத்தை சமன் செய்கிறது. சாதாரணமாக இறந்த செல்கள் நீங்கியபின் சருமம் புதுப்பொலிவு பெறும். 

முகப்பரு

முகப்பரு என்பது அனைவருமே எதிர்கொண்ட ஒரு பிரச்னை. முகப்பரு வந்தால் அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. அந்தவகையில் பப்பாளி முகப்பரு வராமல் தடுக்கிறது, சருமத்தை சுத்தப்படுத்துகிறது, சருமத்தில் அடைபட்ட துளைகளை திறக்கிறது.

சருமப் பொலிவு

பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை பொலிவாக்குவதில் பெரும் உதவி புரிகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் திறனும் கொண்டது.

சேதமடைந்த சருமம்

சேதமடைந்த தோல் பல தோல் பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கலாம். பப்பாளியில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. சேதமடைந்த சருமத்தை சரிசெய்கிறது. 

சருமத்தில் நச்சு

சருமத்திற்கும் நச்சுத்தன்மை தேவைப்படுகிறது. பப்பாளி அதற்கு ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments