முகப்பு
செய்திகள்

சருமம் ஜொலிக்க வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!

சரும ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி...

Updated On : 1 ஏப்ரல் 2026, 3:51 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

சருமம் பொலிவு பெற ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அனைவருக்குமே நல்ல ஆரோக்கியமான, பொலிவான சருமம் வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இதற்காக செயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ பலரும் பல பொருள்களை முயற்சிப்பார்கள். ஆனால் உண்மையில் சருமம் ஆரோக்கியமாக பொலிவாக இருக்க வேண்டும் என்றால் சத்தான உணவுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நல்ல ஆரோக்கியமான இளமையான சருமத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்...

Advertisement

Advertisement

நல்ல ஊட்டத்துள்ள பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பப்பாளி, நெல்லக்காய் சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.

- ENS

கேரட், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பருப்பு வகைகளும் சாப்பிட வேண்டும்.

பாதாம், அக்ரூட் பருப்புகளில் வைட்டமின் இ உள்ளதால் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ இருப்பதால் சருமத்திற்கு பொலிவு தரும். குறிப்பாக பசலைக் கீரை உதவும் என்று கூறப்படுகிறது.

அவோகேடாவில் வைட்டமின் சி, ஏ, இ ஆகியவை இருப்பதால் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. வயதான தோற்றத்தைத் தடுத்து இளமைக்கு உதவுகிறது.

தக்காளியில் லைகோபீன் என்ற கரோட்டினாய்டு சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.

புரதம் அதிகம் நிறைந்து காணப்படும் முட்டையும் சரும ஆரோக்கியத்துக்கு உதவும்.

அதேநேரத்தில் சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது சருமத்திற்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அதேபோல சருமத்திற்கு நீரேற்றம் அளிக்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

summary

Eat these foods for healthy glowing skin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.