மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன்: அமைச்சர் வெங்கட்ரமணன்
மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன் என அமைச்சர் பேசியது...
சென்னை: மக்கள் பொன்னி அரிசி சாப்பிடுவது சமூக அந்தஸ்து என நேற்று அமைச்சர் வெங்கட்ரமணன் பேசியது சர்ச்சையான நிலையில், எனக்கு என்ன தேவை என்பதை நான் சாப்பிடுகிறேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் புது விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் சென்னை மாநகராட்சியில் மூலதன நிதியின் கீழ் ரூ. 8.49 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் வெங்கட்ரமணன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
Advertisement
Advertisement
கடந்த ஆட்சியில் ரூ.12 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு பொருள்களின் தேவைகளை குறைத்து ரூ.8 கோடி மதிப்பீட்டில் நாகேஸ்வர ராவ் பூங்கா கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். அவைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இந்த நவராத்திரி விழாவில் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியில் பிரபலமான நாகேஸ்வரராவ் பூங்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
பொன்னி அரிசி சாப்பிடுவதை மக்கள் சமூக அந்தஸ்தாக பார்க்கிறார்கள் என பேசியது குறித்த கேள்விக்கு, அது ஆங்கிலத்தில் சொல்லும்போது தவறாக தெரிகிறது. மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவர்களது விருப்பம் என்று சொன்னேன்.
நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன். சிறு வயதிலிருந்து ரேஷன் அரசிதான் சாப்பிடுகிறேன்.
இதனிடையே, உங்களது குடும்ப ரேஷன் அட்டையின் நிறம் என்ன? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தனியாக வாருங்கள் சொல்கிறேன்.
சமூக அந்தஸ்து என்பது மக்கள் மகிழ்ச்சிக்காக சாப்பிடுவது. வார இறுதி நாள்களில் மக்கள் வெளியில் சென்று சாப்பிடுகிறார்கள். சனி, ஞாயிறு நாள்களில் வெளியில் சென்று சாப்பிடுவோம். அதுவொரு மகிழ்ச்சி, நம்ம குடும்பத்திற்காக செலவிடும் நேரம் ஒரு மகிழ்ச்சி.
வெங்காய விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு இடையே, ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் குரல் எழுப்பினார்.
கிடங்கில் இருந்து கொள்முதல் செய்து அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெளிமார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். மலிவு விலையில் 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை குறைந்தபட்சம் 5 கிலோ அரிசியை எல்லா ரேஷன் கடைகளிலும் ரூ.30- க்கு வழங்குகிறோம்.
தமிழக மக்கள் கண்டிப்பாக ரேஷன் அரிசிதான் மக்கள் சாப்பிட வேண்டும் என்று தவெக அரசு நினைக்கிறதா? என்ற கேள்விக்கு, ரேஷன் கடையில் பொன்னி அரிசி போன்று அரிசியை போடுவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
அரசை பொருத்தவரை சன்ன ரக அரிசி என்பதை தான் பொன்னி அரிசி என்று சொல்கிறோம். இது அரிசிக்கு அரிசி மாறுப்படும்.
ரேஷனில் பெறப்படும் அரிசி இட்லி அரிசியாக மட்டுமே மக்கள் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள் உங்கள் அரசு என்ன செய்ய போகிறது ?
நீங்கள் ரேஷன் கடைக்குப் போங்கள் மக்கள் என்ன வாங்குகிறார்கள் என்பதை மக்களோடு மக்களாக இருந்து பாருங்கள் .
நீங்களே ரேஷன் அரிசி தான் சாப்பிட்டேன் என்று சொல்கிறீர்கள். கடந்த காலத்தில் அரிசி தரமாக தானே கொடுக்கப்பட்டது ?
எனக்கு என்ன தேவை என்பதை நான் சாப்பிடுகிறேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன். ஒவ்வொரு மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம், அதுக்காக தான் நாங்கள் 7 நாட்களும் ஓடுகிறோம்.
மக்கள் வெளியே போய் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தான் சமூக அந்தஸ்து என்று சொன்னேன் என்றார்.
பட்டினம்பாக்கம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மயிலாப்பூர் தொகுதி பட்டினம்பாக்கம் மக்களிடம் அமைச்சர் வெங்கட்ரமணன் விஜயை பார்த்துதான் வாக்களித்தீர்கள் எனக்காக வாக்களிக்கவில்லை என்று சொன்னது குறித்தான கேள்விக்கு, என்னுடைய தேர்தல் பிரசாரத்தை மீனவ மக்களிடம் தான் தொடங்கினேன்.
இப்போது சொன்னது போல, சீனிவாசபுரம் முல்லை நகரில் ஒரு கல்யாண மண்டபம் இருக்கிறது. அங்கு என்னுடைய தேர்தல் நேரத்தில் அதை எடுத்து நாங்கள் தேர்தல் வேலை செய்தோம். 30 நாள், என்ன கட்டணம் செலுத்தி அதை நான் பயன்படுத்த முற்பட்டேன். ஆனால் அதை பயன்படுத்த என்னை விடவில்லை.
பட்டினப்பாக்கம் பகுதியில் - புதிய தலைமைச் செயலகம்? அமைக்கும் பணிகள் நிலை குறித்து கேள்விக்கு, புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகள் முதல்வரிடம் ஆய்வில் இருக்கிறது என அவர் கூறினார்.
I will not force people to eat any particular food: Minister Venkataramanan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.