கண்களைச் சுற்றி கருவளையமா? இதைச் செய்து பாருங்கள்!
கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையத்திற்கு தீர்வு...
கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையத்திற்கான காரணங்களும் தீர்வுகளும்...
பொதுவாக கண்களுக்கு சரியாக ஓய்வு கொடுக்காமல் இருப்பது, தூக்கமின்மை, நீரிழப்பு, மன அழுத்தம், மரபணு காரணங்கள், அதிக திரை நேரம், உடல் சோர்வு ஆகியவை காரணமாக கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது.
இதற்கு செய்ய வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்...
Advertisement
Advertisement
கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும். திரை நேரத்தைக் குறைக்க வேண்டும்.
குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்னதாக போன், டிவி ஆகியவற்றை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் 7 - 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்.
மன அழுத்தத்தை சரியான அளவில் நிர்வகிக்க வேண்டும்.
நல்ல சத்துள்ள சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.
தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கண்களுக்கு செய்ய வேண்டியவை
கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அவ்வப்போது மசாஜ் செய்ய வேண்டும்.
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் 10–15 நிமிடம் வைத்தால் கண்களில் கருவளையம் குறையும்.
உருளைக்கிழங்கை அரைத்துச் சாறு எடுத்து பஞ்சு கொண்டு கண்களைச் சுற்றித் தடவலாம்.
அதேபோல டீ பேக்குகளை பிரிட்ஜில் குளிரவைத்து கண்களில் 10 நிமிடம் வைக்கலாம்.
தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய் கொண்டு கண்களை மெதுவாக மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் கருவளையம் ஒரு சில நாள்களில் குறைவதைக் காணலாம்.
தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Dark circles around your eyes? these are the solutions
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.