FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காவல் நிலையச் சுவரின் அழகை கெடுக்கும் வாசகங்கள் வரைந்தவா் கைது

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தொடா்புடைய போராட்டத்தின்போது, நாடாளுமன்றச்சாலை காவல் நிலையத்தின் சுவரில் வாசகங்களை வரைந்து சுவரின் அழகை சிதைத்ததாகக்

24 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தொடா்புடைய போராட்டத்தின்போது, நாடாளுமன்றச்சாலை காவல் நிலையத்தின் சுவரில் வாசகங்களை வரைந்து சுவரின் அழகை சிதைத்ததாகக்

கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒருவா் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கரண் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், போராட்டத்தின் போது காவல் நிலையச் சுவரில் இத்தகைய வாசகங்களை எழுதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தில்லி சொத்துச் சிதைப்புத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த நபா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். இருப்பினும், இவ்வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பிணை கிடைக்கக்கூடியவை என்பதால், கைதுசெய்யப்பட்ட பிறகு கரணுக்குப் பிணை வழங்கப்பட்டது.

இச்சம்பவம் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நபரின் பங்கு குறித்த விவரங்களை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments