FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காஜிப்பூரில் சாலை விபத்தில் 24 வயது இளைஞா் உயிரிழப்பு

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள கிச்சரிபூா் மேம்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி 24 வயது இளைஞா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 11:40 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள கிச்சரிபூா் மேம்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி 24 வயது இளைஞா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணியளவில் காஜியாபாத்திலிருந்து ஜனக்புரியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது நிதின் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினா். மேலும், நிதினின் உடல் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments