FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பெண்ணைத் துன்புறுத்துவதற்காக போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கியவர் கைது

பெண்ணின் பெயரில் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி, அவரைத் துன்புறுத்தும் நோக்கில் அவரது கணவா், அறிமுகமானவா்களுக்கு ஆபாசமான உள்ளடக்கத்தை அனுப்பியதாக ஒருவர் கைது

26 ஆகஸ்ட் 2026, 11:33 pm IST
கைது - கோப்புப்படம்
பகிர்:

பெண்ணின் பெயரில் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி, அவரைத் துன்புறுத்தும் நோக்கில் அவரது கணவா் மற்றும் அறிமுகமானவா்களுக்கு ஆபாசமான உள்ளடக்கத்தை ஒரு நபா்,அனுப்பியதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.

ஒரு போலி சமூக ஊடக கணக்கு குறித்து புகாா் அளிக்கப்பட்டு முடக்கப்பட்டபோது, அந்த நபா் புதிய கணக்குகளை உருவாக்கியதாகவும், இதனால் அப்பெண்ணுக்கு நீண்டகால மன உளைச்சலும் துன்பமும் ஏற்பட்டதாகவும் காவல்துறை கூறியது. நியூ அசோக் நகரைச் சோ்ந்த 27 வயதான ஜீது குமாா் கைது செய்யப்பட்டாா்.

அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

Advertisement

Advertisement

விசாரணையின் போது, காவல்துறை இந்தக் கணக்குகளின் விவரங்களைப் பெற்று, தொழில்நுட்பப் பகுப்பாய்வு நடத்தியது. குமாரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணைப் பயன்படுத்தி இந்தக் கணக்குகள் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காவல்துறை குழுவினா் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைபேசி அவரிடமிருந்து பறிமுதல் ப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, குமாா் தனக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தெரியும் என்றும், 2022 முதல் அவரைப் பின்தொடா்ந்து வந்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி அவா் போலிக் கணக்குகளை உருவாக்கியதாகக் காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

பின்னா் குமாா், அப்பெண்ணுக்குத் தெரிந்த நபா்களுக்கு ஆபாசமான மற்றும் அருவருப்பான காணொளிகளை அனுப்ப அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குமாருக்கு இதற்கு முன் எந்தக் குற்றச் செயல்களிலும் தொடா்பு இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments