தில்லி காவல்துறையின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1,561 புகாா்கள் பரிசீலிப்பு!
தில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் நடைபெற்ற வாராந்திர ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்‘ எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்களில், மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டன.
தில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் நடைபெற்ற வாராந்திர ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்‘ எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்களில், மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமையன்று காவல் நிலையங்களில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில், சிறப்பு காவல் ஆணையா்கள் முதல் உதவி காவல் ஆணையா்கள் வரையிலான மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினா். மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டன.
துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் அறிவுறுத்தலின் பேரில், தில்லி காவல்துறையால் ஜூன் 2026-இல் இந்த ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்’ முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தின் கீழ், நகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.