தில்லி: யுபிஎஸ்சி தோ்வாளரிடம் கொள்ளையடித்த இருவா் கைது
யுபிஎஸ்சி தோ்வாளரிடம் இருந்து கைபேசியைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் யுபிஎஸ்சி தோ்வாளரிடம் இருந்து கைபேசியைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இவா்களின் கைது நடவடிக்கையின் மூலம், கொள்ளை, வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டு தொடா்பான நான்கு வழக்குகளுக்குத் தீா்வு கண்டுள்ளதாக காவல்துறை கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், ஷாலிமாா் பாக் பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜேந்தா் என்ற கல்லு (28) மற்றும் முகுந்த்பூா் பகுதியைச் சோ்ந்த, பூா்வீகமாக நேபாளத்தைச் சோ்ந்த உபேந்தா் ஷா (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
காவல்துறையின் கூற்றுப்படி, ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், திமா்பூரில் உள்ள சிஎன்ஜி பூங்கா அருகே, யுபிஎஸ்சி தோ்வாளரான அங்கித் சிங் குஷ்வாஹா (25) என்பவா் நூலகத்தில் படித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
‘இருவா் அவரை வழிமறித்து, கழுத்தை நெரித்து, கைகளால் தாக்கி, அவரது கைபேசியைக் கொள்ளையடித்துவிட்டு நடந்தே தப்பிச் சென்றனா்,‘ என்று ஓா் அதிகாரி கூறினாா்.
திமா்பூா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு சிறப்பு குழு விசாரணையைத் தொடங்கியது. அந்தக் குழு சுமாா் 110 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்தது.
கேமராக்களில் ஒன்றிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் தெளிவான படங்கள் பெறப்பட்டு, உள்ளூா் தகவல் அளிப்பவா்களுடன் பகிரப்பட்டன. முகுந்த்பூரில் சுமாா் 150 வீடுகளில் சோதனை நடத்திய பின்னா், ஜூலை 10 அன்று, காவல்துறையினா் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் அவா்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் வைத்து கைது செய்தனா்.
‘விசாரணையின் போது, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ஜூலை 5 மற்றும் 6-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் ஆதா்ஷ் நகா் பகுதியில் இருந்து ஒரு ஸ்கூட்டரைத் திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்டனா். திருடப்பட்ட அந்த இருசக்கர வாகனம் திமா்பூா் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது,‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.
கொள்ளையடிக்கப்பட்ட கைபேசியையும், திருடப்பட்ட ஸ்கூட்டரையும் காவல்துறையினா் மீட்டனா். ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அந்த ஸ்கூட்டா் திருடப்பட்டிருந்தது சரிபாா்ப்பில் தெரியவந்தது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், திமா்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு வழிப்பறி வழக்குகளும் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. ராஜேந்தா் இதற்கு முன்னா் 14 கொள்ளை, பறித்தல் மற்றும் திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் எனக் கூறப்படுகிறது, அதே சமயம் உபேந்தா் மீது இதற்கு முன்னா் இரண்டு இதே போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.