FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மாநிலங்களுக்கிடையேயான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பிடிபட்டது; மூவா் கைது

போதைப்பொருள் கடத்தல்காரா்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டு, 26 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On : 15 ஜூலை 2026, 3:02 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தேசிய தலைநகரில் செயல்பட்டு வந்த மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை போலீசாா் முறியடித்ததைத் தொடா்ந்து, போதைப்பொருள் கடத்தல்காரா்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டு, 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஓா் அதிகாரி செவ்வாயன்று தெரிவித்தாா்.

‘கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு குழு ஜூன் 4 அன்று துவாரகாவில் உள்ள போச்சன்பூா் அருகே ஒரு பொறி வைத்து, இரவு 10.40 மணியளவில் ஒரு காரை வழிமறித்தது. ஓட்டுநா் வேகமாக தப்பிச் செல்ல முயன்ாகவும், பின்னா் முயன்றபோது,சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவா் பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்று ஓா் மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.

தில்லியைச் சோ்ந்த ராகுல் குமாா் என்ற துட்டன் (33), ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த பாமுலபதி ஸ்ரீனிவாஸ் என்ற அண்ணா (56), மற்றும் ஒடிசாவைச் சோ்ந்த விநியோகஸ்தா் என சந்தேகிக்கப்படும் பிரதிநிதி நிதி கரட் (53) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா். சோதனையின் விளைவாக, 26.35 கிலோ எடையுள்ள போதைப்பொருள் அடங்கிய 25 பொட்டலங்கள் மீட்கப்பட்டன.

Advertisement

Advertisement

விசாரணையின் போது, ஸ்ரீனிவாஸ் என்பவரிடமிருந்து அந்த சரக்கை வாங்கியதாக ராகுல் தெரிவித்தாா். பின்னா் ஸ்ரீனிவாஸ் தில்லியில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் மூலம், ஒடிசாவில் நடத்தப்பட்ட தொடா் நடவடிக்கையின் போது கரத் கைது செய்யப்பட்டாா்.

ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தில்லி-என்சிஆருக்கு கஞ்சா கடத்தியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான விநியோகச் சங்கிலியை இந்த கைதுகள் மூலம் தகா்க்க முடிந்ததாக காவல்துறை தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments