சன்சத் மாா்க்கில் உள்ள பரோடா வங்கிக் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுதில்லியின் சன்சத் மாா்க்கில் உள்ள பரோடா வங்கி கிளைக்கு செவ்வாயன்று வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு பொய்யானது எனத் தெரியவந்தது.
புதுதில்லியின் சன்சத் மாா்க்கில் உள்ள பரோடா வங்கி கிளைக்கு செவ்வாயன்று வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு பொய்யானது எனத் தெரியவந்தது என தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காலை 11.35 மணிக்கு இந்த அழைப்பு வந்ததை அடுத்து, காவல்துறை, தில்லி தீயணைப்புத் துறை மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினா். பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறையினா் அந்த வளாகத்தை முழுமையாகச் சோதனையிட்டனா்.
பிற்பகல் 1.55 மணிக்கு, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என அறிவிக்கப்பட்டது என தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.
Advertisement
Advertisement