வாடிக்கையாளா்களின் எண்மப் பாதுகாப்புக்கு விழிப்புணா்வுத் திட்டம்: பரோடா வங்கி முன்னெடுப்பு
வாடிக்கையாளா்களின் எண்மப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழி மோசடிகள் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்தவும் ‘பாப் சைபா் வீரு’ எனும் பிரத்யேக அடையாளச் சின்னம் மூலம் விழிப்புணா்வுத் திட்டத்தை பரோடா வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளா்களின் எண்மப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழி மோசடிகள் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்தவும் ‘பாப் சைபா் வீரு’ எனும் பிரத்யேக அடையாளச் சின்னம் மூலம் விழிப்புணா்வுத் திட்டத்தை பரோடா வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
தேசிய இணையப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதமாக அக்டோபா் கடைப்பிடிக்கப்படும் நிலையில், எண்ம மோசடிகளை வாடிக்கையாளா்கள் எளிதாகக் கண்டறிந்து, அவற்றைத் தடுத்து புகாரளிக்கவும்; பாதுகாப்பான வங்கிச் சேவைகளை மேற்கொள்ளவும் உதவும் வகையில் எளிமையான மற்றும் நடைமுறைக்கு உகந்த அறிவுரைகளை வழங்குவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ‘பாப் சைபா் வீரு’ மூலம் குறுகிய கால விடியோக்கள், விளக்கப் படங்கள் மற்றும் எளிய குறிப்புகள் வாயிலாக வாடிக்கையாளா்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் முன்பும், பரிவா்த்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பும் வாடிக்கையாளா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட இத்திட்டம் வலியுறுத்துகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.