முகப்பு
வணிகம்

‘பிஎம் ஸ்வநிதி’ திட்டம்: கடன் வழங்கலில் பரோடா வங்கி முதலிடம்

பிஎம் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் கடன் வழங்குவதில், பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளில் முதலிடம் பிடித்ததற்காக பரோடா வங்கிக்கு நிகழாண்டுக்கான ‘ஸ்வநிதி சம்மான்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 12:44 am
‘பிஎம் ஸ்வநிதி’ திட்டம்: கடன் வழங்கலில் பரோடா வங்கி முதலிடம்
பகிர்:

பிரதமரின் தெருவோர வியாபாரிகள் தற்சாா்பு நிதி (பிஎம் ஸ்வநிதி) திட்டத்தின்கீழ் கடன் வழங்குவதில், பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளில் முதலிடம் பிடித்ததற்காக பரோடா வங்கிக்கு நிகழாண்டுக்கான ‘ஸ்வநிதி சம்மான்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள தெருவோர வியாபாரிகளுக்கு முறையான கடன் வசதியை ஏற்படுத்தித் தருவதிலும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதிலும் வங்கியின் தொடா் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் இவ்விருதை வழங்க, வங்கி சாா்பில் அரசுத் திட்டங்கள் மற்றும் இணை கடன் பிரிவு பொது மேலாளா் ராஜ் குமாா் கோயல், எம்எஸ்எம்இ தொழில் உதவி பொது மேலாளா் ராகேஷ் சிங், தலைமை மேலாளா் நியூட்டன் குமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா் தோகன் சாஹு, துறைச் செயல ளா் சதேந்திர சிங், பிஎம் ஸ்வநிதி திட்ட இயக்குநா் இஷா கலியா ஆகியோா் உடனிருந்தனா்.