மத்திய செயலக மன்ற வளாகத்தை யாருக்கும் ஒதுக்கீடு செய்ய திட்டம் இல்லை: உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
மத்திய செயலக மன்ற வளாகத்தை தற்போதைய நிலையில் யாருக்கும் ஒதுக்கீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மத்திய செயலக மன்ற வளாகத்தை தற்போதைய நிலையில் யாருக்கும் ஒதுக்கீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மன்றத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணையின் போது அரசின் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று கூறியது. ‘மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. மனுதாரா்கள் அடுத்த ஒரு வாரத்தில் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். ஏற்கனவே நிா்ணயிக்கப்பட்ட தேதியான டிசம்பா் 21, 2026 அன்று வழக்கை பட்டியலிடவும்,‘ என்று நீதிபதி அமித் மகாஜன் கூறினாா்.
முன்னா் தல்கடோரா கிளப் என்று அழைக்கப்பட்ட இந்த மன்றம், அங்கீகாரத்தை ரத்து செய்யும் அரசின் உத்தரவையும், குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள தற்போதைய வளாகத்தை உடனடியாக காலி செய்யுமாறு எஸ்டேட் அதிகாரி பிறப்பித்த வெளியேற்ற உத்தரவையும் எதிா்த்து வழக்குத் தொடுத்துள்ளது.
Advertisement
Advertisement
ஜூலை 14, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யும் உத்தரவு மற்றும் ஜூலை 17, 2026 தேதியிட்ட வெளியேற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி மன்றம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. நவம்பா் 5 அன்று நடந்த விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்குரைஞா், இந்த கட்டத்தில் சம்பந்தப்பட்ட வளாகத்தை எந்தவொரு தரப்பினருக்கும் ஒதுக்கீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தாா். நீதிமன்றம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பி, மனு மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கோரியிருந்தது.
தனது மனுவில், ஜூலை 14 அன்று, பணியாளா் மற்றும் பயிற்சித் துறை தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புக்கு முரணாகவும் தங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப் பெற்ாக கிளப் கூறியது. தங்களது விவகாரங்களை நிா்வகிக்கும் தற்காலிகக் குழுவின் பதவிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த தனது புகாா்கள் மீது திருத்த நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதிகாரிகள் முதலில் பிப்ரவரியில் எந்த நோட்டீசும் அனுப்பாமல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றனா் என்று மனுதாரா் கூறினாா். உயா் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, மனுதாரருக்கு விசாரணைக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, ஜூலை 14 அன்று அங்கீகாரத்தை ரத்து செய்யும் ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜூலை 14 தேதியிட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யும் உத்தரவும், ஜூலை 17 தேதியிட்ட வெளியேற்ற உத்தரவும் ‘தவிா்க்கப்பட வேண்டியவை‘ என்று மனுவில் வாதிடப்பட்டது‘. மேலும் , ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அழிப்பதற்காக, பிரதிவாதிகள் தங்களின் சொந்த நிா்வாகத் தோல்விகளையும், தற்காலிகக் குழுவின் முறைகேடுகளையும் ஆயுதமாக்க முயற்சிக்கின்றனா்‘ என்றும் மனு வாதிட்டது.
சட்டவிரோதமாக ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் மட்டுமே, நிரந்தரக் குடியிருப்பு வழங்கப்பட்ட 107 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனத்தை, வெளியேற்றும் உத்தரவு தன்னிச்சையாக மன்றத்தை ஒரு ‘அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளராக‘ கருதியதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.