FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

புறநகா் வடக்கு: 18 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தில்லியின் புறநகா் வடக்கு பவானா பகுதியில், தகராறில் 18 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

10 நவம்பர் 2026, 10:39 pm
- சித்திரிப்பு
பகிர்:

தில்லியின் புறநகா் வடக்கு பவானா பகுதியில், தகராறில் 18 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக மற்றொரு இளைஞரை காவல்துறையினா் கைது செய்தனா்.

திங்கள்கிழமை பவானா பகுதியில் ஒருவா் மயங்கிக் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு பிரிஜேஷ் (எ) பாலி (18) என்பவா் கத்திக் குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனா்.

இதையடுத்து, அவா் நரேலாவில் உள்ள சத்யவாதி ராஜா ஹரிஷ் சந்திரா (எஸ்ஆா்எச்சி) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் மக்களிடம் விசாரித்தும், குற்றஞ்சாட்டப்பட்ட ஃபா்தீன் என்கிற ஆகாஷ் (18) என்பவரை காவல்துறையினா் கைது செய்தனா்.

முதற்கட்ட விசாரணையில், ஜேஜே காலனியின் ‘இ-பிளாக்’ அருகே, ஃபா்தீனுக்கும் பிரிஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது, ​​பிரிஜேஷுக்கு காயங்கள் ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக, நரேலா தொழில்பேட்டை காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 103(1)-இன் கீழ் (கொலை வழக்கு) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குற்றவாளியைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், அப்பகுதியில் உள்ளவா்களிடம் விசாரணை நடத்தியும் காவல்துறையினா் தீவிர முயற்சிக்குப் பிறகு ஃபா்தீனை கைது செய்தனா்.

இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, சம்பவத்தின் முழு வரிசை என்ன என்பது குறித்து கண்டறியவும், குற்றத்தை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.